கொரோனா பாதிப்பில் உயிரிழந்து ஒரு வாரமாகியும் கீழக்கரை முதியவர் குடும்பத்துக்கு இன்னமும் இல்லை பரிசோதனை: சுகாதாரத்துறை மெத்தனத்தால் மக்கள் அதிர்ச்சி - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » கொரோனா பாதிப்பில் உயிரிழந்து ஒரு வாரமாகியும் கீழக்கரை முதியவர் குடும்பத்துக்கு இன்னமும் இல்லை பரிசோதனை: சுகாதாரத்துறை மெத்தனத்தால் மக்கள் அதிர்ச்சி

கொரோனா பாதிப்பில் உயிரிழந்து ஒரு வாரமாகியும் கீழக்கரை முதியவர் குடும்பத்துக்கு இன்னமும் இல்லை பரிசோதனை: சுகாதாரத்துறை மெத்தனத்தால் மக்கள் அதிர்ச்சி

Written By siragugaltv on Friday, 10 April 2020 | 5:13 pm

கீழக்கரை: கொரோனா பாதித்து உயிரிழந்த கீழக்கரை முதியவரின் குடும்பத்திற்கு இதுவரை கொரோனா பரிசோதனைகள் செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த முதியவர் துபாய் சென்று வந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 அடக்கம் செய்த பின்புதான் முதியவர் கொராேனா பாதித்து இறந்தது தெரியவந்தது. இதனால் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, நகராட்சி சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கணக்கெடுப்பு நடப்பட்டது.

 இதில் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 203 பேரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. 
மேலும் இறந்தவர் வீட்டை சுற்றி 200 மீட்டர் தூரம் அடைக்கப்பட்டு வெளியாட்கள் நுழையாதவாறு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இறந்த முதியவரின் குடும்பத்தினர் மற்றும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, முதியவர் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், அவரது குடும்பத்தில் இதுவரை யாருக்கும் கொராேனா பரிசோதனைகள் நடைபெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 சுகாதாரத்துறை மெத்தனமாக இருப்பது நோய் பரவலுக்கே வழிவகுக்கும் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என கீழக்கரை பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A