மாநில அரசு சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ், தாமாகவே முன் வந்து ஏராளமானவர்கள் பரிசோதனையின் கீழும், சுய தனிமைப்படுத்துதல் அறிவுரையை ஏற்றும் இருக்கிறார்கள் என்று பிரஸ் மீட்டில் சொல்கிறார்.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், பொது அமைப்புகளும் தெளிவாக இருக்கின்றன. அவர்களும் இதையே தான் வலியுறுத்துகிறார்கள். அடம் பிடிக்கும் இடங்களில் கூட அவர்களே பேசி, போலிஸோடு அனுப்பி வைக்கிறார்கள். இது தான் கள நிலவரம்.
ஆனால், திரும்ப திரும்ப தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓடி ஒளிகிறார்கள். வர மாட்டேன் என்கிறார்கள். பயந்து நடுங்குகிறார்கள். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தோப்புக்குள் போய் விட்டார்கள். கடலோர மாவட்டங்களில் கடலுக்கு உள்ளே போய் விட்டார்கள் etc etc. போன்றவை தொடர்ச்சியாக யாரால் பரப்பப்படுகிறது என்பது தெரிந்ததே.
இந்த பொய்யினையும், மத துவேஷத்தையும் பரப்புவதால் நாம் அனைவரும் அடைய போவது எதுவுமே இல்லை. இந்துவாக இருப்பதாலேயே செருப்பு காலோடு வந்த வைரஸ் வீட்டு வாசலில் நின்று மசூதிக்கோ, தேவாலயத்துகோ போக போவதில்லை. பொது சுகாதார பெருந்தொற்று சிக்கல்களில் மதத்தையோ, சாதியையோ, இனத்தையோ இழுப்பது இழுக்கானது. அது அசிங்கமும் கூட.
அரசும், அமைப்புகளும் இம்மாதிரியான மதரீதியான தனிமைப் படுத்துதலையும், அதை ஊக்குவிப்பவர்களையும், வதந்திகள் பரப்புவர்கள் என்று தெளிவாக நிர்ணயித்து Disaster Management Act, 2005-ன் கீழ் நாலு வாரம் ஸ்டேஷனில் உட்கார வைத்தால், தலைக்கேறிய மதபோதை முழுமையாக தெளியும்.
வைரஸ் மதம் பார்ப்பதில்லை.
ஆனால், மதமே பெரிய வைரஸ் தான்.
நன்றி.. Narain Rajagopalan சார்..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !