நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழந்த சோகம்இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 200 முதல் 300 கி.மீட்டர் தூரங்களுக்கு நடந்தே செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது
மத்தியப் பிரதேச மாநிலம் நாக்பூரில் வேலை பார்த்துவந்த தமிழ்நாட்டின் நாமக்கலைச் சேர்ந்த லோகேஷ் சுப்ரமணி என்ற 23 வயது இளைஞர் 500 கி.மீ தூரம் நடந்துவருவதற்கு முடிவு செய்து, சக தொழிலாளர்களுடன் இணைந்து நடந்துவந்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் வந்திருந்தநிலையில், அவர் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தெரிவித்த அவருடைய நண்பர் சத்யா, ’நாங்கள் கடந்த மூன்று தினங்களாக நடந்துவருகிறோம். எங்களுக்கு வாகன வசதி கிடைக்கவில்லை. சிலர், ஒவ்வொரு இடங்களில் உணவு அளித்தனர். சில எங்களுக்கு லிஃப்ட் கொடுத்தனர். எங்களுக்கு லிஃப்ட் கொடுத்தற்காக, காவல்துறையினர் எங்களைத் தாக்கினார்கள்’ என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் தமிழக தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !