அச்சு, காட்சி ஊடகங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . இந்தியாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.கடந்த 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு, தனியார் நிறுவனங்கள் உள்பட மூடப்பட்டுள்ளன . தற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவை அரசு தீவிரமாக கடைபிடித்து வருவதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற கடைகளை மூட வேண்டும் என
அரசு உத்தரவிட்டுள்ளது . இதன் காரணமாக பெட்டிக்கடைகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இதனால் தினசரி, வார, மாத இதழ் ஆகியவை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் விளம்பரங்களும் அச்சு, காட்சி ஊடகங்களுக்கு விளம்பரங்கள் இல்லாமல் செய்தி நிறுவனங்கள் கடுமையாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை நிறுவனங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை நாட்களில் இல்லாத ஒரு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. பல்வேறு இன்னல்களை தற்போது பத்திரிகை நிறுவனங்கள் சந்தித்து வரும்போதும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியை தொய்வில்லாமல் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வருமானம் இல்லாமல் திணறி வரும் அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி ஒன்றை தமிழக அரசு சார்பில் வழங்கிட வேண்டும் என்றும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் களப் பணியாற்றி வரும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் சேர்ந்த நிருபர்கள், போட்டோகிராபர் கள், கோமிராமேன்கள் உட்பட அனைத்து பணியாளர்க்கும் சிறப்பு ஊதியம் ஒன்றை தமிழக அரசு சார்பில் வழங்கி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை காப்பாற்ற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பாக வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !