அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக எம்பி எம்எல்ஏக்கள் நிதியுதவி: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு - Siragugal Tv
Headlines News :
Home » , , » அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக எம்பி எம்எல்ஏக்கள் நிதியுதவி: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக எம்பி எம்எல்ஏக்கள் நிதியுதவி: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Written By siragugaltv on Monday, 23 March 2020 | 8:13 am

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக எம்பி எம்எல்ஏக்கள் நிதியுதவி: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை:

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறும்பொழுது, தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களது ஒருமாத சம்பள தொகையை நிதியுதவியாக வழங்குவார்கள் என அறிவித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வருவாய் இழந்து பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தனது ஒருமாத சம்பள தொகையான 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நேற்று வழங்கியுள்ளார். இதற்காக தலைமை செயலாளர் சண்முகத்தை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, அதற்கான காசோலையை வழங்கினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A