எனது வீட்டை மருத்துவ மய்யமாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன்: கமல் ஹாசன் - Siragugal Tv
Headlines News :
Home » , , , , » எனது வீட்டை மருத்துவ மய்யமாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன்: கமல் ஹாசன்

எனது வீட்டை மருத்துவ மய்யமாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன்: கமல் ஹாசன்

Written By siragugaltv on Wednesday, 25 March 2020 | 5:12 pm

எனது வீட்டை மருத்துவ மய்யமாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன்: கமல் ஹாசன்
கொரோனா வைரஸ் இந்தியாவை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

எந்த நேரத்திலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக இருப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஸ்டான்லி மருத்துவமனையில் தங்கி இருந்த உள்நோயாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்குகிறது.

இந்நிலையில் தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.

உங்கள் நான்...’’ என்று பதிவிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A