கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரை மீறி பெங்களூரில் இரண்டு இளஞ்சர்கள் சாலையில் வீலிங் செய்து இருக்கின்றனர்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் 2 பேரையும் கண்டித்து லத்தியால் தாக்கி இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளஞ்சர்கள் காவலர் மீது தாக்குதல் நடத்தவே அந்த வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இரண்டு இளஞ்சர்களையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள அப்பொழுது இளஞ்சர் ஒருவருக்கு குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு வடக்கு மண்டல காவல் துறை ஆணையர், இரு இளஞ்சர்களும் ஊரடங்கு உத்தரை மீறி இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து இருக்கின்றனர். இதனை எச்சரித்த காவல்துறை மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். எனவே இருவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்த போலீசார் விசாரணை நடத்தியபோது இளஞ்சர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கி இருக்கின்றனர். இதன் காரணமாக தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் இளஞ்சர் ஒருவரின் காலில் குண்டு பாய்ந்துள்ளது என்று விளக்கமளித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !