
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் அரசு அலுவலர்களுக்கு என்று அலுவலர்கள்
மன்றம் என்று செயல்பட்டு வருகிறது.இதில் அரசு அலுவலர்கள் என்ற போர்வையில் தினம்
தினம் மது குடிப்பதும் சீட்டு விளையாடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு
வந்துள்ளனர். அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் சிவனருள் திடீரென்று உள்ளே நுழைந்த
பார்த்தபோது அங்கிருந்த இளைஞர்கள் மது குடித்து விட்டு சென்றது தெரிய வந்து
பின்னர் அந்த அலுவலக கட்டிடத்தில் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக
சீட்டுக்கட்டு மது பாட்டில்களும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக
அந்த அலுவலக கட்டிடத்திற்கு சீல் வைக்க
உத்தரவிட்டார். அதன்பேரில்திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் வில்சன் ராஜசேகர் அவர்கள் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் ஆய்வு
செய்து ஆபீஸர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள்
மற்றும் சீட்டுகளை பறிமுதல் செய்தார். நமது தேடல்,மண்டல செய்தியாளர்,அ.சா.அலாவுதீன்.திருபத்தூர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !