கடந்த 28.03.2020அன்று இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நேரடியாக கொரானா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சித்தமருத்துவர்களிடம் கலந்தாலோசித்திருக்கிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அதாவது
தமிழகத்தில் பரவிய டெங்கு காய்ச்சலை 'நிலவேம்பு கசாயம்' மூலம் தமிழகத்தில் இருந்து முழுமையாக நீக்கினோம். அதேபோல இந்த கொரானா வைரஸ் நோய் மக்களை தாக்காமல் இருக்க உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்தை அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
எப்படி நிலவேம்பு கசாயத்தை ஒவ்வொரு கிராமம் வாரியாகவும், நகரம் வாரியாகவும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் மக்களுக்கு விநியோகித்து டெங்குவை ஒழித்தோமென்றும், அதேபோல இந்த மருந்தையும் கொடுத்தால் மனித உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த கொரானா வைரஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் மிக உறுதியுடன் தெரிவித்து இருக்கிறார்கள்.இதை கேட்ட பிரதமர் இது குறித்து விரைந்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
ஆனால் இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து கிட்டதட்ட 48மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மத்திய அரசு இன்னும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
இந்த அவசர நிலையில் இதுபோன்ற காலதாமதம் மேலும் அசாதாரண சூழ்நிலையையே உருவாக்கும். எனவே மேலும் தாமதம் ஆவதை தடுக்கும் விதமாக தமிழக அரசே முன்வந்து மத்திய அரசிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு செயலில் இறங்க வேண்டுமென்று மே 17 இயக்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
மே 17 இயக்கம்
9884072010
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !