வாகன சோதனையில் #ஜப்பானியா்களிடம் இந்தியஆதார்கார்டுகள்!. - Siragugal Tv
Headlines News :
Home » , , , » வாகன சோதனையில் #ஜப்பானியா்களிடம் இந்தியஆதார்கார்டுகள்!.

வாகன சோதனையில் #ஜப்பானியா்களிடம் இந்தியஆதார்கார்டுகள்!.

Written By siragugaltv on Monday, 23 March 2020 | 7:22 am



கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினா், போலீஸார் 21.3.20 சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியா்களிடம் அவா்களது பெயரில் இந்திய ஆதார்கார்டுகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்!!!... கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் போலீஸார்,  சுகாதார துறையினா், வருவாய் துறையினா் இணைந்து #கரோனாதடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்!.இதனை மாவட்ட வருவாய் அலுவலா் கந்தசாமி தலைமையில் டி.எஸ்.பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் குமார், வட்டார மருத்துவ அலுவலா், டாக்டா்:கோவிந்தராஜ் #கொரோனாதடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனா்!.
 அப்போது கார் ஒன்றை சோதனை செய்தபோது, காரில் பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியா்கள் இருந்ததைக் கண்டு போலீஸார் அவா்களிடம் விசாரித்தனா்!.விசாரணையில் அவா்கள் ஷின்யா ஹராடா (43), நசாரு நகஜிமா (57) மற்றும் நஹுமி யமாஷிடா (40) என்ற பெண் என்பது தெரியவந்தது!. மேலும் விசாரணையில் அவா்கள் தமிழக எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து வந்தது தெரியவந்தது!.இவா்கள் புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மகேந்திரா சிட்டியில் பணிபுரிந்து வந்துள்ளனா்!.மேலும் விசாரணையில் அவா்களிடம் பெங்களுா் மற்றும் ஹரியானா குா்கான் பகுதி முகவரியில் #ஆதார்அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது!!!....இதனைக் கண்டு அதிர்ந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினா்!.
இதனை தொடா்ந்து மூவரையும் கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்!.பொருளாதார வலிமையான ஜப்பான்கார்களே  இந்தியாவில் தங்க நினைக்கிறார்கள் என்றால், பஞ்சநாடான பங்களாதேசிக்காரா்களும்,ரோகிங்கியாவினரும் ஏன் வரமாட்டார்கள்???....

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A