108 ஆன்புலன்ஸ் ஊழியர்களை அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்ய : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! - Siragugal Tv
Headlines News :
Home » , , , , , » 108 ஆன்புலன்ஸ் ஊழியர்களை அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்ய : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

108 ஆன்புலன்ஸ் ஊழியர்களை அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்ய : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

Written By siragugaltv on Monday, 30 March 2020 | 3:57 pm

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

தமிழகத்தில் கொரோணா தடுப்பு நடவக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கும், 110 விதியின் கீழ் ஒரு மாதம் ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கபடும் என மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.  மேலும் அதே போல் 108 ஊழியர்களுக்கும் ஒரு மாதம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

இந்த கொரோணா வைரஸ் அபாயத்தையும் மீறி மக்களுக்காக இரவு பகலும் பாராமல் பொது மக்களுக்கு சேவை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கையுறை மற்றும் முக கவசம் கூடுதலாக தமிழக அரசு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.


பல்வேறு சமயங்களில் ஏற்படும் விபத்துகளில்  மனித உயிரை காப்பாற்ற தனது உயிரை பொற்படுத்தாமல் மனித நேயத்துடன் மக்கள் நலனில் முழு அக்கறை கொண்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேவை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.


எனவே : சுயநலம் இல்லாமல் பொது நலத்தோடு கடினமாக உழைத்து  சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மிக சிறப்பாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

பல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

பம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா

Recent Post

Recent Post

siragugaltv

 
Support : Creating Website | siragugaltv Template | siragugaltv Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Siragugal Tv - All Rights Reserved
Original Design by Siragugaltv Website Modified by Muthukkumaran.A