
சென்னை:
கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு பின்னரும் நிலைமை எப்படி இருக்கும் கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் திட்டமிட்டபடி தேர்வை நடத்துவது சிரமம்.
இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !